தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலீஸ் வாகனத்தில் டிக் டாக் செய்த சிறுவர்கள் - காவல்துறை அளித்த வினோத தண்டனை! - tik tok latest news

தூத்துக்குடி: போலீஸ் வாகனத்தின் மீது ஏறி டிக் டாக் வீடியோ வெளியிட்ட சிறுவர்கள் மூன்று பேருக்கு காவல்துறையினர் வினோத தண்டனையை வழங்கினர்.

tik tick toktok
tik ttick tokok

By

Published : Jan 8, 2020, 11:53 PM IST

Updated : Jan 9, 2020, 12:01 AM IST

தூத்துக்குடியில் பழுது பார்பதற்காக நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி மூன்று சிறுவர்கள் டிக் டாக் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் லெவிஞ்சிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த சீனு (17), கோகுலகிருஷ்ணன் (17), செகுரா (21) என்பது தெரியவந்தது.

தாங்கள் செய்த தவறை உணர்ந்து, இனிமேல் இதுபோன்ற எந்தத் தவறும் செய்ய மாட்டோம் என காவலர்களிடம் சிறுவர்கள் மன்னிப்பு கேட்டனர்.

போலீஸ் வாகனத்தின் மீது ஏறி டிக் டாக்

வினோத தண்டனை

இதையடுத்து காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை சிறுவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்கள் மூன்று பேரையும், பெரிய மார்க்கெட் சிக்னலில் 8 மணி நேரம் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு, காவல்துறையை பெருமைப்படுத்தவேண்டும் என தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் சிறுவர்களுக்கு அறிவுறுத்தினார்.

’டிக் டாக்’ சிறுவர்கள்

இதனைத்தொடர்ந்து அவர்கள் இன்று ஒருநாள் காலை முதல் மாலை வரை தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: காவல் நிலைய வளாகத்தில் 'சும்மா கிழி' டிக் டாக் செய்த பாமக நிர்வாகி - தலைக்கு தில்ல பார்த்திங்களா?

Last Updated : Jan 9, 2020, 12:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details