யுனெஸ்கோ அமைப்பானது 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 23ம் தேதி உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினத்தை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அரசுகிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்றது. உலக புத்தகதினத்தை முன்னிட்டு வில்லியம் ஷேக்ஸ்பியரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
உலக புத்தக தின விழா - புத்தகக் காட்சி - நூலகம்
தூத்துக்குடி: உலக புத்தக தின விழாவை முன்னிட்டு கயத்தார் அரசுகிளை நூலகத்தில் புத்தகக் காட்சி நடைபெற்றது.
புத்தககண்காட்சி
இதில், 1000-க்கும் மேற்பட்ட நூல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்காட்சியினை திரளான மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த விழாவிற்கு கயத்தார் நூலக வாசகர் வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கயத்தார் கிளை நூலக புரவலர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.