தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: உயிர்தப்பிய ஆறு மீனவர்கள்! - தூத்துக்குடி மீனவர் செய்திகள்

தூத்துக்குடி: நடுக்கடலில் படகு கவிழ்ந்து, தண்ணீரில் தத்தளித்த மீன்வர்கள் ஆறு பேரை, சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தூத்துக்குடியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடியில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து

By

Published : May 13, 2020, 9:27 PM IST

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து பிரதீப் (வயது 43) என்பவருக்குச் சொந்தமான பதிவு எண் இல்லாத வள்ளத்தில் மீனவர்கள் பிரதீப் (47), பிரசாத் (39), ஆரோக்கியம் (30), ஜேம்ஸ் (30), ஜெரால்டு (35), பிதேலி (35) உள்ளிட்ட ஆறு பேர் நேற்று முன்தினம் காலை 7‌ மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்கள், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, படகில் ஏற்பட்ட பழுது காரணமாக படகு கடலுக்குள் மூழ்கியது. இதனால் நிலை குலைந்த மீனவர்கள் தவறி கடலுக்குள் விழுந்தனர். அப்போது அவ்வழியே மீன்பிடிக்க மற்றொரு வள்ளத்தில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களை மீட்டனர்.

உயிர்தப்பிய 6 மீனவர்கள்

இதைத்தொடர்ந்து கடலில் மூழ்கிய படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் ஆறு பேரும் நேற்று மாலையில் திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்கள் ஆறு பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க...10 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் - டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details