தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டுவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் கையில் வழங்கப்படுவதால் பொது மக்கள் அதை தவறவிட்டு செல்லக்கூடிய சூழ்நிலை நிலவிவந்தது.
இதனால், இதை சரிசெய்யும் விதத்தில் கோவில்பட்டி நகரில் செயல்படும் தன்னார்வ ரத்த தான அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மருந்துகள் கொண்டு செல்லும் வகையில் மருந்து கவர்களை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமலவாசன், கண்காணிப்பாளர் மருத்துவர் பூவேஸ்வரி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.