தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது பாண்டவர்மங்கலம் ஊராட்சி. இந்த பகுதிக்குட்பட்ட முத்து நகரில், கணேஷ் நவீன் என்பவரது வீட்டிற்கு பின்புறம் குப்பைகள் அதிகமாக இருந்துள்ளன. இந்நிலையில், அவற்றை அகற்றும் பணியில் கணேஷ் ஈடுபட்டிருந்தபோது, குப்பையிலிருந்த மர்ம பொருள் திடீரென வெடித்ததால் அவர் காயம் அடைந்தார்.
குப்பையை அகற்றியதால் ஏற்பட்ட வினை..! - unknown stuff
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே குப்பையை அகற்றும்போது மர்ம பொருள் வெடித்ததால் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த இளைஞர்
மேலும் அவரது வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகள் இந்த மர்ம பொருள் வெடித்ததில், சேதமடைந்தன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய அலுவலர்கள், வெடித்த மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்தனர்.