தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் பூவுடையார்புரத்தில் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யக்கோரியும், கறுப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்தும் கறுப்புக் கொடி கையிலேந்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
கறுப்பர் கூட்டத்தை கண்டித்து கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்! - Black crowd
தூத்துக்குடி: கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கறுப்பர் கூட்டம் இணையதள பிண்ணனியில் உள்ளவர்களை கைதுசெய்ய வலியுறுத்தி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கோட்ட இந்து முன்னணி செயலர் சக்திவேலன் செய்திருந்தார்.
இதையும் படிங்க:கந்த சஷ்டி விவகாரம்: ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்? - சி.வி.சண்முகம்