தூத்துக்குடி: பாஜக தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழா, மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 1,000 ஏழை எளிய கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பெண்களுக்குத் தையல் மெஷின், மற்றும் சேலைகளை வழங்கினர்.
மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில், சிறப்பு அழைப்பாளராகச் சிறுபான்மை அணி செயலாளர் அசோகன், பாஜக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், சட்ட மன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
பின்னர் தூத்துக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அண்ணாமலை குறித்துப் பேசியதற்குப் பதிலடி அளித்த பேசிய சசிகலா புஷ்பா ”ஒன்றரை வருடம் திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாட தகுதி உள்ளவர் அண்ணாமலை ஆகவே, அவரை புகழ்கிறோம்.
முழு தகுதி பெற்றவர் அவர், பாஜக தலைவர் அண்ணாமலை எந்த கோர்ட் வாசலிலும் சொத்து குவிப்பு வழக்குக்கு நிற்கவில்லை. குற்றவாளிகளைக் கொண்டு போய் நின்று தான் பழக்கம், குற்றவாளியாய் நின்று அவருக்குப் பழக்கம் இல்லை. 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும், மக்களுக்காக உழைக்கும் அவரை பற்றி பேச தகுதி இல்லை.