தமிழ்நாடு பாஜக கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி முதல் வேல் யாத்திரையை தொடங்கி நடத்திவந்தது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த வேல் யாத்திரை, திருச்செந்தூரில் இன்று நிறைவுபெறுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. திருச்செந்தூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நிகழ்ச்சி நடக்கும்” என்று தெரிவித்து இருந்தார்.