தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்.. - நயினார் நாகேந்திரன் - எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான் நயினார் நாகேந்திரன்

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான் என பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்.. பிஜேபி போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது -  நயினார் நாகேந்திரன்  எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்
எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்.. பிஜேபி போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது - நயினார் நாகேந்திரன் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்

By

Published : Jul 1, 2022, 10:43 AM IST

Updated : Jul 1, 2022, 12:56 PM IST

தூத்துக்குடி: பாஜக மாநில துணைத் தலைவரும், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கும். தலைவர்களின் மறைவுக்குப்பின் உள்ள இடைவெளியில் அதிமுக கட்சியில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை அக்கட்சியின் பிரச்சனை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை, ஒற்றை தலைமை பிரச்சனையை யார் ஆரம்பித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான்.. - நயினார் நாகேந்திரன்

இது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை. எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜக தான். திமுகவின் ஆட்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அக்னிபத் திட்டம் ஒரு அருமையான திட்டம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வீட்டில் ஒருவருக்குக் கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அது போன்று இல்லை. இளைஞர்கள் விருப்பப்பட்டு அக்னிபத் திட்டத்தில் சேரலாம். இது இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.

மேலும், ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கற்கள் எங்கும் கிடைக்கவில்லை. ஒரு யூனிட் மணல் 15000 முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை.

ஒரு காலத்தில் பிஜேபி போராட்டம் நடத்தினால் வெளியே தெரியாது. ஆனால் இப்போது போராட்டம் என்று அறிவித்தாலே மக்கள் வெற்றியாகக் கருதுகிறார்கள். பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு பாஜக தலைமை கூடாது - தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

Last Updated : Jul 1, 2022, 12:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details