தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் நினைவு தினம்: தூத்துக்குடியில் பாஜக - விசிக இடையே மோதல்! - Bharat Mata Ki Jai

தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் விசிக - பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.

தூத்துக்குடியில் பாஜக - விசிக இடையே மோதல்
தூத்துக்குடியில் பாஜக - விசிக இடையே மோதல்

By

Published : Dec 6, 2022, 9:24 PM IST

தூத்துக்குடி:சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் அம்பேத்கர் சிலைக்குப் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது பாரத் மாதா கி ஜே(Bharat Mata Ki Jai) என கோஷம் எழுப்பியுள்ளனர்.

இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் அகமது இக்பால் தலைமையிலான கட்சியினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் பாஜக - விசிக இடையே மோதல்

இதையடுத்து சம்பவ இடத்தில் தென்பாகம் போலீசார் வந்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்தச் சம்பவம் எதிரொலியாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:லஞ்சமா? ஒரு வாட்ஸ் அப் போதும்.. தூத்துக்குடி ஆணையர் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details