தூத்துக்குடி மாவட்டம் புல்லா வெளி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பிடி இலை கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி, இன்று (டிசம்பர் 21) அதிகாலை 04.00 மணி அளவில் க்யூ பிரிவு போலீசார் சம்பவயிடத்துக்கு விரைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகதுக்கிடமாக அங்கு நின்றுகொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்டனர். அதில் 1.1/2 டன் மதிப்புள்ள பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தூத்துக்குடி அருகே ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல், க்யூ பிரிவு போலீசார் அதிரடி
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கிலோ பீடி இலை இந்திய மதிப்பு 500 ரூபாய். ஆனால், இலங்கையில் கிலோ 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது கடத்தப்பட்ட இலைகளின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் இதன் மதிப்பு 45 லட்சம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி!