தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவர் கைது!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிய 2 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்

By

Published : Aug 9, 2020, 5:28 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டியை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மேற்பார்வையில், இலுப்பையூரணி பகுதியில் உள்ள கிட்டங்கில் காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது அங்கு ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூடை மூடைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ஒக்கடுராம் மகன் ராகேஷ் (30), கோபால் செட்டி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டன் (22) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ஒவ்வொரு மாதமும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து மூடை மூடையாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
மற்றொருவர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் ரோந்து சென்றபோது, இலுப்பையூரணி மயானப் பகுதியில் நின்ற இளைஞரை சோதனையிட்டனர். இதில் அவரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோவில்பட்டியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (19) என்பது தெரியவந்தது. பின் இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

ABOUT THE AUTHOR

...view details