தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (27). இவருடைய மனைவியின் சகோதரி கணவர் விக்னேஸ்வரன் (28) பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவிக்கும் பிரேம்குமாருக்குமிடையே ரகசிய தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய அண்ணியை கே.டி.சி. நகரில் உள்ள வீட்டிற்கு பிரேம்குமார் அழைத்து வந்துள்ளார்.
இதனையறிந்த விக்னேஷ்வரன் தனது நண்பர்கள் நான்கு பேருடன், பிரேம்குமாரை தேடி கே.டி.சி. நகருக்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருவருக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேம்குமாரை வெட்டினார். இதில், சுதாகரித்துக்கொண்டவர் அங்கிருந்து தப்பி தெருக்களில் ஓட ஆரம்பித்தார். இருப்பினும் விக்னேஷ்வரனின் நண்பர்கள் பிரேம்குமாரை விரட்டிச் சென்று ஓட ஓட வெட்டி படுகொலை செய்தனர்.