தூத்துக்குடி: செல்சினி காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பார்த்த சாரதி (35). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று (நவம்பர் 23) மதியம் 3 மணியளவில் அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் அவரிடம் திடீரென தகராறு செய்து, அரிவாளை எடுத்து, பார்த்த சாரதியை வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், பார்த்த சாரதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.