தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பகுதி ஏ.டி.எம்.இல் கொள்ளை முயற்சி - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பகுதி ஏ.டி.எம். இயந்திரத்தில் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதி ஏ.டி.எம்-ல் கொள்ளை முயற்சி
வ.உ.சிதம்பரனார் துறைமுக பகுதி ஏ.டி.எம்-ல் கொள்ளை முயற்சி

By

Published : Apr 29, 2021, 6:57 AM IST

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் வளாகத்தினுள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டுவருகிறது. இந்த ஏ.டி.எம்.ஐ உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

ஏ.டி.எம். மையத்தில் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட வங்கிப் பணியாளர்கள் தெர்மல் நகர் காவல் துறையினருக்கும், வங்கி உயர் அலுவலர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஏ.டி.எம். மையத்தில் வங்கி அலுவலர்கள் நடத்திய சோதனையில் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் பணம் கொள்ளைபோகாமல் இருந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கத்தியைக் காட்டி பணம், நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details