தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் தாமோதர பாண்டியன் மகன் கனகராஜூ (40). இவர் தனது வீட்டின் அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர், கனகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அவரது தாய் பார்வதி தடுக்க முயன்றுள்ளார். இதனால் பார்வதிக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவ இடத்திலேயே கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அவரது தாய் பார்வதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.