தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதி தப்பிக்க முயற்சி! - கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதி தப்பிக்க முயற்சி!

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் தப்ப முயன்ற விசாரணை கைதியை, பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.

scape
scapee

By

Published : Nov 2, 2020, 1:58 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த கூட்டாம்புளியை சேர்ந்த சக்திவேல், இன்று காலை திடீரென சிறை காம்பவுண்ட் சுவர் மீதேறி தப்பிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், சக்திவேலை சுற்றிவளைத்து பிடித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறையில் உள்ள சக்திவேல், ஏரல் காவல் நிலையத்தில் நகை பறிப்பு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details