தூத்துக்குடிமாநகராட்சியில் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விற்பனை செய்யும் வகையில் 'முத்துரம்' என்ற லோகோவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் வெளியிட்டார்.
மாநகராட்சியில், நாளொன்றுக்கு 150 டன் குப்பைகள் சேகரித்து குப்பைக்கிடங்கிற்கு அனுப்பப்படும் நிலையில் மக்கும் குப்பைகளைப் பிரித்து மாநகராட்சியில் 7 உரம் தயாரிக்கும் மையங்கள் மூலம் விவசாயத்துக்கு வேண்டிய நுண் உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளொன்றுக்கு 50 டன் வரை நுண் உரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், குப்பையில் இருந்து தயாரிக்கக் கூடிய உரத்தில் அதிக சத்துகள் இருப்பதால் இந்த உரங்களைப் பயன்படுத்துவதற்கு தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் இந்த உரத்தைப் பெறுவதற்கு முன்வந்துள்ளனர்.