தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடிக்கு வந்த நீர் மூழ்கிக் கப்பல்...

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர் மூழ்கிக் கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

நீர்மூழ்கி கப்பல்
நீர்மூழ்கி கப்பல்

By

Published : Jul 18, 2021, 2:46 PM IST

தூத்துக்குடி: சமீப காலமாக வங்காள‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.

இது சீனா - இந்தியா இடையே போர் பதற்றத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இதனையொட்டி, இந்திய தரப்பிலும் ராணுவ வலிமையை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தயார் நிலையில் இந்திய ராணுவம்

அதன்படி, நாட்டின் அனைத்து எல்லைகளிலும் பீரங்கிகள், அதிநவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கிய கப்பல்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் வரவழைக்கப்பட்டு "சிந்துஷாஸ்ட்ரா" நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறை சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான நீர் நிரப்புவதற்காகவும் நீர் மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த "சிந்துஷாஸ்ட்ரா" நீர் மூழ்கிக் கப்பல் வந்து இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளன.

இந்தக் கப்பல் ஒரு வார காலம் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி - திருநெல்வேலி 2ஆம் இடம்

ABOUT THE AUTHOR

...view details