கோவை மீனாட்சி நகரைச் சோந்தவர் முருகானந்தம் (60). கடந்த மாதம் 26ஆம் தேதி கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் திருமங்கை சேரிட்டபிள் டிரஸ்டின் பெயரில் ரூ. 6 கோடி காசோலையை செலுத்திவிட்டு சென்றுள்ளார். காசோலையை சரிபாா்க்கும்போது போலியானது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வங்கி மேலாளா் சூரஜ், கோவை மாநகர குற்றப் பிரிவில் புகாா் அளித்துள்ளார். இதுதொடா்பாக, தனிப்படை அமைத்த கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த காசோலை டெல்லியைச் சேர்ந்த முகுல் ரோத்தகி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது.