உலக சிலம்பாட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள் விந்தியா, மீராலட்சுமி ஆகியோருக்கு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மலோசியாவில் கடந்த 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை உலக சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, கம்போடியா, பங்களாதேஷ், நேபாள் நாடுகளை சேர்ந்த 420 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனத்தைச் சேர்ந்த 120 வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில் 10-14 வயதுள்ள, 25-28 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட விந்தியா, நடுகம்பு தனித்திறமை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார்.