தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு மயிலோடை கிராமத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் நூலகமானது கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டுவந்தது.
ஜந்தாயிரம் புத்தகங்களுடன் பள்ளி மாணவ - மாணவியர்கள் ஓய்வு நேரத்தில் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்காக மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களுடன் அந்நூலகமானது ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த நூலகத்தை சமூக விரோதிகள் மதுபானக் கூடமாக ஆக்கிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள் நூலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் நூலகத்தை சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட காலி மதுபான பாட்டில்கள், குடி தண்ணீர் பாக்கெட்டுகள் கிடந்ததோடு மட்டுமின்றி, நூலகத்திற்குள்ளேயே ஆடு, கோழிகள் வெட்டப்பட்டு அதன் ரத்தங்கள் அங்கேயே தேங்கி கிடப்பதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
நூலகத்தை மதுபான கூடமாக மாற்றிய சமூகவிரோதிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டிய அப்பகுதி பொதுமக்கள், தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த நூலகத்தை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து!