தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை! - Anti corruption Raid in Thoothukudi

தூத்துக்குடி: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் இன்று (வியாழக்கிழமை) நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியிலசோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்
தூத்துக்குடியிலசோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்

By

Published : Nov 12, 2020, 10:08 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சுப்பையா முதலியார்புரம் 4ஆவது தெருவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருள்கள் அதிகளவில் வருவதாக அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான அலுவலர்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் திடீர் சோதனைச் செய்தனர்.

தூத்துக்குடியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்


சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், அளவுக்கு அதிகமான பட்டாசு பெட்டிகள், இனிப்பு பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத ரூ.64,800 ரொக்கம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல்செய்த அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

ABOUT THE AUTHOR

...view details