தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பனிமய மாதா பேராலய திருவிழா பக்தர்களின்றி தொடக்கம்! - பனிமய மாதா பேராலய திருவிழா

கரோனா தொற்று காரணமாக தூய பனிமய மாதா பேராலய திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

lady of snows shrine basilica begins
பனிமய மாதா பேராலய திருவிழா

By

Published : Jul 26, 2021, 1:24 PM IST

தூத்துக்குடி:ஒவ்வொரு ஆண்டும் பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். இதில் உலக நன்மை, சமாதானம், மாணவ- மாணவிகள் கல்விமேன்மை, தொழில் விருத்தி என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள், நற்கருணை பவனி உள்ளிட்டவை நடைபெறும்.

திருவிழாவின் பத்தாம் நாள் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி நடைபெறும். இந்தத் திருத்தலத்தின் சிறப்பே கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் பிராத்தனைக் கூட்டங்களில் அதிகளவில் பங்கேற்பதுதான்.

பனிமய மாதா பேராலயம் கொடியேற்றம்

பனிமய மாதா பேராலய திருவிழா

உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவிழாவைக் கொண்டாட வருவர். இந்தாண்டு கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்திருந்தார்.

பக்தர்களின்றி தொடங்கியது பனிமய மாதா பேராலய திருவிழா

திருவிழா நிகழ்வுகளை உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலய பங்கு சபை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வரலாற்றில் 2ஆவது முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி பனிமய மாதா ஆலய திருவிழா இன்று (ஜூலை26) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

நேரடி ஒளிபரப்பு

திருவிழாவின் முதல்நாளான இன்று கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை குமார் ராஜா, முக்கிய பங்கு நிர்வாகிகள் முன்னிலையில் பனிமய அன்னை திருவிழா கொடியேற்றப்பட்டது.

அப்போது விண்ணுயர பனிமய அன்னை வேண்டி குரல் எழுப்பியும், சமாதான புறாக்களை பறக்கவிட்டும் விழா தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டன.

பக்தர்களின்றி பனிமய மாதா பேராலய திருவிழா

திருவிழா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுவதால் ஆலயத்தில் சப்பர பவனி, தேர்பவனி நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகள் அமைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் மற்ற நாட்களில் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தரிசித்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவிழாவையொட்டி, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் 400 காவலர்கள் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய மதுரை மக்கள்

ABOUT THE AUTHOR

...view details