தமிழ்நாடு

tamil nadu

'திமுக கூட்டணியில் இடங்களைப் பங்கிடுவதில் குழப்பம்'

By

Published : Sep 29, 2021, 2:49 PM IST

உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் பங்கீடு குறித்து திமுக கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் எங்களுக்குள் இல்லை. எனவே தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் பெரிய வெற்றிபெறும் எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தூத்துக்குடி: ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதல் நடைபெறவுள்ள நிலையில் அண்ணாமலை தூத்துகுடியில் பரப்புரை மேற்கொள்ள சென்றார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொலை குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல் துறையோடு அரசும் ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் திமுக அதை இதுவரை செய்யவில்லை. கரீப் கல்யாண் அன் யோஜனா, தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழ்நாடு அரசு.

திமுகவின் நீட் நாடகம்

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் நாடமாகமாடுகிறது. மாநில அரசால், நீட் தேர்வு குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவே, அரசுக்கு எதிராகக் கேள்விகள் இருக்குமிடத்தை நிரப்பாமல்தான் விட்டுள்ளது.

அவருடைய அறிக்கையைத் தெளிவாக எடுத்துப் பார்த்தால் நீட் தேர்வுக்குப் பெற்றோர், மாணவர்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பது தெரியும். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது,

'திமுக ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடைமானம் வைத்துள்ள நகைகளுக்குக் கடன்‌ தள்ளுபடி கிடைக்கும். எனவே நகை அடைமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகைக்கடன் பெற்றுக்கொள்ளுங்கள். திமுக ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம்' என உதயநிதி வாக்குறுதி அளித்திருந்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோயிலுக்கு வர தடைவிதிப்பது என்ன நியாயம்?

ஆனால் இன்று முதலமைச்சர் மு.க‌. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசும்போது வங்கிகளில் முறைகேடாக நகை அடைமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கிறார். ஸ்டாலினின் அறிவிப்பின்படி, நியாயமாகப் பார்த்தால் முதலில் உதயநிதி மீதுதான் வழக்குப்பதிய வேண்டும். இதெல்லாம் திமுக அரசியலுக்காகப் போட்ட நாடகம்.

நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புக்காக பள்ளி திறப்பது வரவேற்கத்தக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் இன்றளவும் வழிபாட்டுத் தலங்களில் சாமி தரிசனம்செய்ய தடைவிதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. டாஸ்மாக், குறைதீர் கூட்டம், உள்ளிட்டவற்றை நடத்த அனுமதி அளித்த அரசு சாமி தரிசனம்செய்ய விதித்துள்ள தடையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

நோய்த்தொற்றுப் பரவும் ஆபத்தான சூழலில், தடுப்பூசி செலுத்தாத பள்ளி குழந்தைகளை நேரடியாகப் பள்ளிக்கு வரவழைக்க பெரிய முயற்சியை எடுக்கும் அரசு தடுப்பூசி செலுத்திய பெரியவர்களை கோயிலுக்கு வரக்கூடாது எனச் சொல்வது என்ன நியாயம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

திமுக கூட்டணியில் குழப்பம்

இந்த அரசு எல்லா மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டும். அனைவருக்கும் அனைத்து நிலைகளிலும் சரியான முடிவை எடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிக்குள் இடங்கள் பங்கீடு பெறுவது எளிதாக முடிகிற காரியம் அல்ல.

திமுக-காங்கிரஸ் இடையே இடங்கள் பங்கீடு குறித்து நிலவும் குழப்பத்தை வெட்டவெளிச்சமாகப் பார்க்க முடியும். ஆனால், அதிமுக-பாஜக இடையேயான இடங்கள் பங்கீடு பேச்சுவார்த்தையை மாவட்ட அளவிலான தலைவர்களே சுமுகமுறையில் பேசித் தீர்த்துக்கொண்டனர்‌.

எனவே, தேர்தல் இடங்கள் பங்கீடு குறித்து திமுக கூட்டணிக்குள் நிலவும் குழப்பம் எங்களுக்குள் இல்லை. ஆதலால் தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் பெரிய வெற்றிபெறும்” என்றார்.

இதையும் படிங்க : 'காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே எப்பிரச்சினையும் இல்லை'

ABOUT THE AUTHOR

...view details