தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற் குழு கூட்டம் முத்தையா புரத்தில் உள்ள திமுக தெற்கு மாவட்ட கழகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
'நான் தூத்துக்குடியில் போட்டியிட என்ன காரணம்..?' - கனிமொழி - தூத்துக்குடி
தூத்துக்குடி: "தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டதற்கு அனிதா ராதாகிருஷ்ணன்தான் முக்கிய காரணம்" என்று, கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

இதில் பேசிய கனிமொழி, "நான் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் அனிதா ராதா கிருஷ்ணன்தான். ஏனெனில், தூத்துக்குடி தொகுதிக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டு கொண்டதன் பேரில் நான் போட்டியிட்டேன். இந்த நாட்டையே பெரிய சுனாமி தாக்கிய வேளையில் தமிழ்நாட்டில் திமுக அதற்கு பெரிய தடுப்பு சுவராக இருந்துள்ளது.
இங்கே போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் தோல்விக்கு பிறகு, மக்கள் எனக்கு வாக்களிக்காததற்கு வருத்தபடுவார்கள் என கூறி வருகிறார். உண்மையில் தேர்தல் முடிவுக்கு பின் நாம் தலை நிமிர்ந்துள்ளோம். நிச்சயமாக நான் தூத்துக்குடி மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். முடிந்தவரையில் நான் தூத்துக்குடியில் தான் இருப்பேன். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையோடு கட்சியினர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேர்தலின் மூலமாக கூட வரலாம்" என்றார்.