தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமமுகவின் ஒன்றிய கவுன்சிலர்கள்களுடன் அக்கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," ஒரு ஜனநாயகத்தில் மக்களுக்கு சேவை செய்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதற்கு கயத்தாறு ஒன்றியம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கயத்தாறு ஒன்றியத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும் வேறுபாடின்றி எங்களை ஆதரித்ததால் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.