தூத்துக்குடி மாவட்டம் ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக 6 ஒன்றியங்களிலும், திமுக 4 ஒன்றியங்களிலும், அமமுக ஒரு ஒன்றியத்திலும் வெற்றிபெற்றன. இதில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கபட்டுள்ளது.
பன்னிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 16 வார்டுகளில், அமமுக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் 10 வார்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். சுயேச்சையாக ஒரு ஒன்றிய உறுப்பினரும், மற்ற வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தது.
கயத்தார் யூனியனை கைபற்றி அமமுக இதில் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருந்த அமமுக கட்சி வேட்பாளர் மாணிக்கராஜாவுக்கு, சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் ஆதரவளித்திருந்தார். இதனால் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தலைவராக அமமுகவின் தென்மண்டலச் செயலாளர் மாணிக்கராஜா தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் சொந்த ஊரான சிதம்பராபுரம் அடங்கியுள்ள வார்டில் அமமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாவட்ட குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்தவர் போட்டியின்றி தேர்வு