தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ‘துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மையாக்கி பேசும் திறன் பெற்றவர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் எதற்கு பணம் வசூலிக்க வேண்டும். எதற்கு இந்த மாற்றம். இவர்களே ஆட்களை தயார்படுத்தி நீதிமன்றத்துக்கு அனுப்பி உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஏற்பாடு செய்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அரசு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் எப்படி ஆட்சியை ஏற்படுத்தினார்களோ அதேபோல் மகாராஷ்டிராவிலும் இன்றைக்கு ஜனநாயக படுகொலை நடந்துள்ளது’ என்றார்.