நெல்லை: பொருட்காட்சி மைதானத்துக்கு எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் அன்பழகன் உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆய்வு செய்ய அலுவலர்கள் நியமனம்
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டிடத்தின் திறன் தன்மை குறித்த ஆய்வு செய்ய 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை டவுனில் விபத்து ஏற்பட்ட சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் நேரடியாக சென்று அந்தப் பள்ளியின் இடிந்த கழிப்பறை இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறும்போது, ”நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதேபோல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன இதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த குழுவினர் ஆய்வு செய்த பிறகு இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடம் - புதிய கட்டிடம் கட்டித் தர மாணவர்கள் கோரிக்கை