தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் அமைத்த கூட்டணி தொடருகிறது - இல. கணேசன் தகவல் - BJP Senior Leader Interview with Ganesan

தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் அமைந்த கூட்டணி தொடருகிறது என்றும், எங்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை எனவும் பாஜக தேசிய குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்

By

Published : Oct 4, 2019, 2:54 PM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடந்தது. பாதயாத்திரையை பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அதிமுகவும், பாஜகவும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது அமைத்த கூட்டணி நீடித்து கொண்டு தான் இருக்கிறது. இடைத்தேர்தலில் பணிபுரிவது குறித்து பேசுதற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதரராவ் ஒரிரு நாளில் எங்களை அழைக்கலாம். மற்றப்படி அதிமுகவுடன் எங்களுக்கு வேறு ஏதும் பிரச்னை இல்லை.

காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என வெளிப்படையாக கூறி வருவதால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பேட்டி

மேலும் அதிமுக அரசு பற்றி பாஜக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு, அவர் கூறியதாவது, அது தவறான கருத்து அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நல்ல நெருக்கமான நட்புறவு இருந்து வருகிறது. வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகம் பெற்றுள்ளார்.

இதற்கு காஷ்மீருக்கு வழங்கி வந்த 370 பிரிவை நாங்கள் நீக்கிய காரணத்தால், வேலூரில் உள்ள தேச பக்தர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது அதிமுகவுக்கு நன்றாகவேத் தெரியும். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details