தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிராம சாலைகள் போடப்படும் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி - Bi-election

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து கிராம சாலைகளும் விரைவில் போடப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்தார்.

Minister Rajendrabalaji

By

Published : May 2, 2019, 8:05 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டபேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் கிராமங்களில் நேற்று வாக்குகள் சேகரித்தார்.

வெள்ளப்பட்டி, துப்பாஸ்பட்டி, தருவைகுளம், ஏ.எம்.பட்டி, மேலமருதூர், குமாரபுரம், மேல அரசரடி உட்பட 19 கிராமங்களில் நேரில் சென்ற அமைச்சர் மக்களோடு மக்களாக அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார். அப்போது சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என்று ஏராளமான கிராம மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

கிராம மக்களிடம் அமைச்சர் பேசும்போது, ”அனைத்து கிராம சாலைகளும் உறுதியாக அமைத்து தரப்படும். இந்த பணிகளை நேரடியாக கண்காணிப்பேன். கிராம மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், மீன்பிடி தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு எடப்பாடியார் அரசு சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கி வருகின்றது.

எனவே கிராம மக்கள் அனைவரும் ஒரு ஓட்டுக்கூட மாற்று அணிக்கு செல்லாத வகையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details