ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், 'பாஜக தலைமையிலான மத்திய அரசு இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தனிப்பட்ட நபரின் விருப்பமான சட்டம் அல்ல. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் திடீரென்று கொண்டுவரப்பட்டது அல்ல. இது மக்களுக்குத் தேவையான ஒன்று.
இதை எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் மக்களையும், இளைஞர்களையும், பெண்களையும் திசை திருப்பி பொய் பரப்புரைகள் மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.