கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் பதினொறாம் ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நேற்று முதல் வரும் 26ஆம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணநகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறுகிறது.
மொத்தம் 11 நாட்கள் நடைபெறும் இந்த ஹாக்கிப் போட்டிகள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்க உள்ளன. கனரா வங்கி - பெங்களுர், ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே - புவனேஷ்வர், தமிழ்நாடு போலீஸ் - சென்னை, பெங்களுர் ஹாக்கி அசோசியேஷன்ஸ் - பெங்களுர், ஆல் இந்தியா கஸ்டம்ஸ் ரூ ஜிஎஸ்டி - மும்பை, சாய் - சென்னை, இந்தியன் பேங்க் - சென்னை, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்தராபாத், ஹாக்கி கூர்க் - கர்நாடகா, பிஇஜி ரூ சென்டர் கிர்கீ ஹாக்கி - புனே, ஐசிஎப் - சென்னை, சிஐஎஸ்எப் - சண்டிகர், யூனியன் வங்கி - மும்பை, நேஷனல் ஹாக்கி அகாடமி - நியூடெல்லி, தெற்கு இரயில்வே - சென்னை மற்றும் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடெமி - கோவில்பட்டி ஆகிய அணிகள் கலந்து கொள்ள உள்ளன.