தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - கோவில்பட்டி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரைக் கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 22, 2021, 8:23 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் கஸ்தூரி, அதிமுகவைச் சேர்ந்த இவரும், இவரது கணவர் சுப்புராஜும் கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் திமுகவில் இணைந்த கஸ்தூரி, சுப்புராஜ் ஆகியோரைக் கண்டித்து கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவுறுத்தலின்பேரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆர்ப்பாட்டத்தினைத் தொடங்கிவைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததைக் கண்டித்தும், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details