தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேவுள்ள கழுகுமலையில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.30 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஒரு குடும்பம் கபாலிகரம் செய்கிறது என்ற காரணமாக தான், எம்ஜிஆர் கழகத்திலிருந்து பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தார். வைகோவும் வாரிசு அரசியலை
எதிர்த்து தான் திமுகவிலிருந்து பிரிந்தார்.
திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவது ஒன்றுதான், உதயநிதி ஸ்டாலினை எப்போது முன்னிலை படுத்தினர்களோ அப்போதே நாங்கள் நினைத்தோம், சட்டப்பேரவை உறுப்பினராகுவார், பின்னர் அமைச்சராகுவார் என்று. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மெகா கூட்டணி அமையும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வியூகம் அமைத்து வருகிறார்.