தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கில் திமுகவுக்கு திருவோடு தான் கிடைக்கும் - மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ - eps

வாரிசு அரசியலையும், திமுகவையும் பிரிக்க முடியாது ஆகவே ஈரோடு தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும் என்று கூறியுள்ள முன்னாள் அமைச்சர் திமுகவிற்கு திருவோடுதான் என விமர்சனம் செய்துள்ளார்.

"திமுகவுக்கு திருவோடுதான் கிடைக்கும்": முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
"திமுகவுக்கு திருவோடுதான் கிடைக்கும்": முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : Jan 25, 2023, 10:18 AM IST

ஈரோடு தேர்தலில் வெற்றி எங்களுக்கு தான் கிடைக்கும் திமுகவிற்கு திருவோடுதான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்

தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசுகையில், "உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும். எடப்பாடி பழனிச்சாமி தான் கழகத்தின் பொதுச்செயலாளர் என தீர்ப்பு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒரு தொண்டன் கூட முதலமைச்சராக முடியும் என்றால் அது அதிமுகவில் தான். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறும்.

தொண்டர்களுக்கான கட்சி அதிமுக தான், வாரிசு அரசியல் என்ற தலைப்பில் பட்டிமன்றம் அமைக்கலாம் அந்த அளவுக்கு உள்ளது திமுக. ஈரோட்டில் திமுக நின்றால் ஈரோடு எங்களுக்குத் தான், திமுகவுக்குத் திருவோடு தான் கிடைக்கும் இதனால் தான் ஈரோட்டைக் காங்கிரசுக்கு விட்டு கொடுத்தது திமுக” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஈரோடு வெற்றிக்குப் பின்னர் அதிமுக தான் ஒரே கட்சி, அது எடப்பாடியார் தான் என காலம் வரும். விரைவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார். ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்" என்று கூறினார். இந்நிகழ்வின் முடிவில் திமுக கட்சியை சேர்ந்த 50 -க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: ஆத்தி எத்ததண்டி!.. தோல் தொழிற்சாலைக்குள் புகுந்த 3 பாம்புகள்!

ABOUT THE AUTHOR

...view details