தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தேர்தல் - வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடிக்கு இரட்டை ரயில் பாதை கொண்டு வருவேன் என அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜய சீலன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுவினை தாக்கல்
வேட்பு மனுவினை தாக்கல்

By

Published : Mar 18, 2021, 5:04 PM IST

தூத்துக்குடி சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக கூட்டணிக் கட்சியின் சார்பில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, அதிமுக தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தெற்கு மாவட்டச் செயலாளர் பால்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்ந்து, நேற்று அங்கிருந்து தொண்டர்கள் ஆதரவுடன் ஊர்வலமாக கிளம்பிய வேட்பாளர் எஸ்டிஆர் விஜய சீலன் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிம்ரன்ஜித்சிங் கலோனிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவினை தாக்கல்
இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், 'தூத்துக்குடியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கீதா ஜீவன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்களுக்கு எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களையும் கொண்டுவந்து சேர்க்கவில்லை. அவர் வெறும் வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், மக்களின் தேவை அறிந்து சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தனது கடமையைச் செய்யவில்லை. நான் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் முன்னின்று தீர்த்து வைப்பேன். தூத்துக்குடி நகரில் பிரதான பிரச்சினையான மழைநீர் வடிகால் அமைத்து, மழைக் காலங்களில் குடியிருப்புகளைச் சுற்றி, நீர் தேங்குவதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.

மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும்; தூத்துக்குடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கவும் இரட்டை ரயில் பாதையைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுப்பேன். மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவேன்’ என்றும் கூறினார்.

இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே ரயில் நிலையம் அமைக்க பரிசீலிக்கலாம் - நீதிமன்றம்


ABOUT THE AUTHOR

...view details