தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி - மயூரா ஜெயக்குமார் - காங்கிரஸ் செயலத்தலைவர் மயூரா ஜெயக்குமார்

தூத்துக்குடி: அதிமுக - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Mayura Jayakumar

By

Published : Oct 2, 2019, 6:08 PM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. சமயம் பார்த்து காலை இழுக்கின்ற கூட்டணி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை அதிமுக சந்திக்கும். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு முழு அளவில் செயல்பட்டு வருகிறோம்.

மயூரா ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

நிச்சயம் வெற்றியும் பெருவோம். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரக இருந்த வசந்தகுமார் அதிமுக உறுப்பினர்களை விட அந்த தொகுதிக்கு அதிகளவில் திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார். அதிமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள், அமைச்சர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர்’ என்றார்.

இதையும் படிங்க: ‘பணத்தை நம்பும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்’ - கனிமொழி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details