தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டிகே ரங்கராஜன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற காரணங்களால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளுக்குப் பின்பு அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தப்படும்.
திருவள்ளுவர், வ.உ.சி., பாரதியார் ஆகியோரை அந்தக் காலகட்டத்தினை வைத்து பார்க்காமல், தற்போதைய காலகட்டத்தை வைத்து பார்ப்பது சட்டவிரோதமான நடவடிக்கையாகும். நீட் தேர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு சாதகமான தீர்ப்பும் கிடைத்தது.