தூத்துக்குடி:கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பரமசிவம் நினைவுப்படம் மற்றும் நூலகம் திறப்பு விழா வழக்கறிஞர் சங்க கட்டட வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் பரமசிவம் திருவுருவப்படத்தினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திறந்து வைத்தார். அதன்பின் நூலகத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமி நாதன் திறந்து வைத்தார். அப்போது நீதிபதி புகழேந்தி பேசுகையில், “கோவில்பட்டி நீதிமன்றத்தில்தான் எனது பணியை தொடங்கினேன். வழக்கறிஞர் பணிக்கு வர காரணம் எனது சித்தப்பா மூத்த வழக்கறிஞர் பரமசிவம்தான் காரணம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு வந்த பின்னர் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு சென்னை சென்று வாதாடினோம். காரணம் எனது சித்தப்பா பரமசிவம் தான்.