தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள சென்னல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேலின் மகன் வேல்முருகன் (27) வழக்கறிஞராக உள்ளார். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த இவரது உறவினரான செல்வம் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை நிலப் பிரச்னை தொடர்பாக வேல்முருகனிடம், செல்வம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு முற்ற கோபமான செல்வம், வேல்முருகனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
வழக்கறிஞர் வெட்டிக்கொலை - இளைஞர் கைது - land issue
தூத்துக்குடி: முறப்பநாடு அருகே நிலம் தொடர்பான பிரச்னையில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![வழக்கறிஞர் வெட்டிக்கொலை - இளைஞர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4107899-thumbnail-3x2-ad.jpg)
வழக்கறிஞர் வேல்முருகன்
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வேல்முருகன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.