தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு நபர் ஆணையத்தின் 24ஆவது கட்ட விசாரணை இன்று(ஜன-18) தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த 5 நாள் விசாரணையில் 56 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: ரஜினிகாந்த் சார்பாக வழக்கறிஞர் ஆஜர்! - lawyer Ilambarathi
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, ஒருநபர் ஆணையத்தில் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி
இந்நிலையில், நாளை (19-01-21) நடைபெறும் விசாரணையில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விளக்கமளிக்க நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி விளக்கமளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.