தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறி உறவு வைத்த கணவன்: கண்டித்த மனைவிக்கு அரிவாள் வெட்டு! - husband arrested for attempt of murdering wife

தூத்துக்குடி: வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை கண்டித்ததால், ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

கொல்ல முயற்சி

By

Published : Aug 28, 2019, 3:58 AM IST

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள மும்மலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டப்பன் (49), இவரது மனைவி தங்கத் திருமணி (47) இவர்களுக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆனபோதும், குழந்தை இல்லை.

இந்நிலையில், எட்டப்பன் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீரிய உறவை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தங்கத் திருமணி அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக தம்பதியினர் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதையடுத்து, உறவு வைத்திருக்கும் பெண்ணை விட்டுவருமாறு எட்டப்பனிடம், தங்கத் திருமணி கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த எட்டப்பன், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தங்கத் திருமணி, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளர். அதன்பின், அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த கடம்பூர் காவல்துறையினர், எட்டப்பனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details