தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பணத்தை நம்பும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்’ - கனிமொழி - பணத்தை நம்பும் அதிமுகவிற்கு தேர்தலில் தோல்விதான் கிடைக்கும்

தூத்துக்குடி: அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

kanimozhi

By

Published : Oct 2, 2019, 2:11 PM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‘அதிமுக எப்பொழுதுமே பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்து வருகிறது. இந்த இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடாவை அவர்கள் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியிலும் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடகம் உள்ளிட்ட அனைவருடைய பொறுப்பு, பணத்தை நம்பி போட்டியிடும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்.

கனிமொழி செய்தியாளர் சந்திப்பு

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் அதிமுக ஆட்சியின் துரோகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த ஆட்சியின் அவலத்தை புரிந்து கொண்டுள்ளார்கள். எனவே இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்' என்றார்.

இதையும் படிக்க: தேர்தல் பணிக்கு சென்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details