தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘10% இடஒதுக்கீட்டில் அதிமுகவின் நிலைபாடு அக்கட்சிக்கே விரோதமானது’ - திருமா - திருமா

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக (10% இட ஒதுக்கீடு) பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள். இது அதிமுக கட்சிக்கு விரோதம், மக்களுக்கு எதிரானது என விடுதலைகள் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

10 இடஒடுக்கீட்டில் அதிமுகவின் நிலைபாடு அக்கட்சிக்கே விரோதமானது...! - திருமா
10 இடஒடுக்கீட்டில் அதிமுகவின் நிலைபாடு அக்கட்சிக்கே விரோதமானது. திருமா

By

Published : Nov 13, 2022, 10:39 PM IST

Updated : Nov 14, 2022, 11:54 AM IST

தூத்துக்குடியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக, முதலமைச்சர் தலைமையில் சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது என்கிற முடிவை ஏகமனதாக எடுக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதனை எதிர்த்து வழக்கு தொடுத்த நிலையில், ஒரு தரப்பாக வாதாடிய ஒரு சூழலில் மறுசீராய்வு செய்வதற்குரிய வாய்ப்பு உள்ளது. எனவே மீண்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய இருக்கிறோம்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சமூக நீதி அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ், சங்க பரிவார் பாஜக தனிப் பெரும்பான்மை பலத்தை கொண்டு செயல் திட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனையே இன்றைக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

10 இடஒடுக்கீட்டில் அதிமுகவின் நிலைபாடு அக்கட்சிக்கே விரோதமானது திருமா

ஜெயலலிதா, எம்ஜிஆர் அவர்கள் இருந்த காலத்தில் சமூக நீதிக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள், பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். எம்ஜிஆர் இட ஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பு விதித்த போது கடுமையான எதிர்ப்பு எழுந்தது. 1980 மக்களவைத் தேர்தலில் அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய அளவுக்கு மக்கள் எம்ஜிஆர் அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் தேர்தலில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

ஆகவே, உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக வாக்களித்தார். அதன்படி, அந்த வருமான வரம்பு என்ற அரசாணையை திரும்பப் பெற்றுக்கொண்டு ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 30 விழுக்காடாக இருந்த இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார் இது எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த வரலாறு.

எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையார் சமூக நீதிக்காகப் பாடுபட்ட நிலையில், அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு இன்றைக்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கிற அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பாஜக நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள். இது அதிமுக கட்சி விரோதம், மக்களுக்கு எதிரானது என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 6 பேர் விடுதலை குறித்து பேசுகையில், “6 பேர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பெற்றிருப்பது ஒரு நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, ஒரு நீண்ட நெடிய ஏக்கத்தை தணிக்கின்ற ஒரு தீர்ப்பு உச்சநீதிமன்றம். தன்னியல்பாக அதிகாரத்தை கையில் எடுத்து இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், ஆறு பேரில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள், 4 பேர் இலங்கையைச் சார்ந்தவர்கள், அவர்களை சிறப்பு முகாமில் அடைக்க கூடாது.

இலங்கைக்கும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டி இருந்தோம். இப்போது அந்த நால்வரையும் சிறப்பு முகாமிற்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அவர்களை அங்கிருந்து வைக்க வேண்டும் அவர்கள் வெளியில் காவல் துறையின் கண்காணிப்பு தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அயல்நாடுகளுக்கு உறவினர்களோடு தங்குவதற்கு அவர்கள் செல்ல விரும்பினால் அயல்நாடு செல்வதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

அமித்ஷா பேச்சு குறித்த கேள்விக்கு, “மாநிலத்துக்கு மாநிலம் ஒரு கொள்கையை பேசுவார்கள். டெல்லிக்கு போனால் அதற்கு முற்றிலும் மாறான கருத்தை பேசுவார்கள். பாஜக முன்னணி தலைவர்களை மோடி, அமித்ஷா போன்றவர்களின் நேரத்திற்கு ஒன்றை பேசுவது, நிலத்திற்கு ஒன்றை பேசுவது, சூழலுக்கு ஒன்றை பேசுவது என்கிற நிலைப்பாட்டை கொண்டவர்கள். தமிழுக்கு ஆதரவாவானவர் போல தமிழ்நாட்டில் வந்து பேசுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. பாஜக அரசின் நிலைப்பாடு பாராளுமன்ற நடவடிக்கைகளை முற்றிலும் இந்திக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியை தவிர பிற மொழியை ஒரு பொருட்டாக மதிக்க கூடியவர் இல்லை, இந்தி பேசக் கூடிய மாநிலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் மாற்றிவிட வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தமிழில் மருத்துவம் கற்று தரவேண்டும் என்று சொல்லியிருந்தது அவருடைய நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்கிறது. தமிழில் எல்லாம் வர வேண்டும் என்பது நம்முடைய ஆசை, ஆனால் அது அவர்களின் நிலைப்பாடாக தமிழ் மக்களை ஏமாற்றக் கூடிய வகையிலே சொல்வது என்பது தான் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: "6 பேர் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது" - ரவிச்சந்திரன் தாயார் ராஜேஸ்வரி

Last Updated : Nov 14, 2022, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details