தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது.
ஓட்டப்பிடாரத்தில் களைகட்டிய அதிமுகவின் தேர்தல் பரப்புரை! - அதிமுக தேர்தல் பரப்புரை
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, அமைச்சர்கள் கடம்பூர் ராஜ், காமராஜ் ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
![ஓட்டப்பிடாரத்தில் களைகட்டிய அதிமுகவின் தேர்தல் பரப்புரை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3235705-thumbnail-3x2-iygyu.jpg)
இதற்காக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தனி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் சங்கரபேரி, பண்டாரம்பட்டி, தேவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக வேட்பாளர் மோகன் பேசுகையில், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் சீரான குடிநீர், தரமான சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.