தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து திரைப்பட நடிகை விந்தியா தாளமுத்துநகர், மாப்பிள்ளையூரணி, ஹவுசிங் போர்டு காலனி (வீட்டுவசதி வாரியம்) உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
இதில் பேசிய அவர், "தன் குடும்ப சொத்து மொத்தத்தையும் விற்று ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று கப்பல் விட்டு போராடியவர் வ.உ. சிதம்பரனார். அவர் வாழ்ந்த இந்த பூமியில், மக்களுடைய சொத்தை சுருட்டி கப்பல் விடும் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் உள்ள திமுக கூட்டணி வெற்றிபெறக் கூடாது.
ஊழல் குறித்து பேசுவதற்கு அதிமுகவுக்கு அருகதை இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே திமுகதான். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர்.
இந்த உலகத்தில் அதிகமாக பொய் சொல்வது சன்டிவி. அதற்கு ஒரு படி மேலே போய் பேசுவது டிடிவி. இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் சிறந்த நகைச்சுவையாளன் டிடிவி தினகரன்தான்.
அடுக்கு மொழி வசனங்களை பரப்புரையில் தெறிக்கவிட்ட நடிகை விந்தியா நன்றி என்றால் என்ன என்பது தெரியாத, உப்பு போட்ட வீட்டுக்கே துரோகம் நினைக்கிற டிடிவி ஒருநாளும் வெற்றிபெறக் கூடாது" என்றார்