தூத்துக்குடி:மழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்திற்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், இன்று (டிச.30) வந்தார்.
இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி மாநகரில் உள்ள லெவிஞ்சிபுரம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும்போது, கூட்ட நெரிசல் காரணமாக டி.ராஜேந்தர் திடீரென மயக்கம் அடைந்தார். பின்னர், உடனடியாக அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை மயக்கத்தில் இருந்து மீட்டு பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.