தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி ஒருங்கிணைந்த கலை மன்றங்கள் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் 73 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
வாய்ஸ் நோட் அனுப்பி கர்ப்பிணிகளுக்கு வாழ்த்துக்கூறிய நடிகர் ரஜினிகாந்த் - baby shower
தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு ரஜினிகாந்த், தனது குரல் பதிவின் மூலம் வாழ்த்துக் கூறியது விழாவில் ஒலிபரப்பப்பட்டது.
விழாவில் வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றச்செயலாளர் ரவி, தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற இணைச் செயலாளர் குமாரவேல், தவமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 73 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு 21 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், கர்ப்பிணிகளுக்கு பட்டுச்சேலை, குங்குமச் சிமிழ் உள்ளிட்டப் பொருட்கள் லதா ரஜினிகாந்த் சார்பாக வழங்கப்பட்டன. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் நோட் மூலம் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக் கூறியது விழாவில் ஒலிபரப்பப்பட்டது.
இதையும் படிங்க:சிவாஜிக்கு எந்த அரசும் உரிய மரியாதை செய்யவில்லை - இயக்குநர் பாரதிராஜா ஆதங்கம்!